ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15,000 கனஅடியாக குறைந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15,000 கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 11 Oct 2017 6:13 AM IST (Updated: 11 Oct 2017 6:13 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

பென்னாகரம்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று பகலில் நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று மாலையும் நீர்வரத்து இதேநிலை நீடித்தது. மழைநீர் அதிக அளவில் வந்ததால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

கண்காணிப்பு

தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்தின் அளவை மத்திய நீர்வளத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர். ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலா வந்தவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். ஆற்றங்கரையோர பகுதிகளில் குளிப்பதை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்தனர். 

Related Tags :
Next Story