“அமித்ஷா மகன் விவகாரத்தை அரசியலாக்கி காங்கிரஸ் தந்திரம் செய்கிறது” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
“அமித்ஷா மகன் விவகாரத்தை அரசியலாக்கி காங்கிரஸ் கட்சி தந்திரம் செய்கிறது” என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே அமைச்சரிடம் பேசியிருக்கிறோம். தொடர்ந்து பேசி வருகிறேன்.
டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசுதான் யோசிக்க வேண்டும். இழப்பீடு கொடுத்துவிட்டு ஒரு உயிரை எடுத்து விடலாம் என்றால், அது நல்ல விஷயம் கிடையாது. அது ஏற்றுக்கொள்ள முடியாதது.
டெங்குவால் அதிகமாக குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். பெரியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இழப்பீடு ஒரு தீர்வாக இருக்க முடியாது. அதே நேரத்தில் டெங்குவால் இறந்தவர்களை சார்ந்தவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்வது என்பது எல்லாம் அரசாங்கத்தின் முடிவாகும்.
ஆட்சி நீடிக்குமா?
சசிகலா பரோலில் வந்திருப்பது தொடர்பாக அரசியல் பேசுவது நாகரிகமாக இருக்காது. அமைச்சர் செல்லூர் ராஜூவை, ஸ்லீப்பர் செல் என்று கூறப்படும் விவகாரம் குறித்து ஏற்கனவே அ.தி.மு.க.வின் ஒரு அணியின் தலைவர் பதில் சொல்லியிருக்கிறார். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது அ.தி.மு.க.வின் இன்னொரு அணிதான்.
தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா? என்று கேட்கிறீர்கள். எங்களை பொறுத்தவரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் முழுமையான காலத்தை முடிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.
அமித்ஷா மகன் விவகாரம்
அமித்ஷா மகன் மீதான குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக தெளிவான பதிலை அவர்கள் கொடுத்துள்ளனர். ஏட்டிக்கு போட்டி என்று சொல்லும் வகையில் போலி குற்றச் சாட்டுகள் அடிப்படையில் காங்கிரஸ் இயக்கத்தினர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தகுந்த பதிலை சொன்ன பிறகும் அவர்கள் திருப்தி அடையவில்லை என்றால் என்ன செய்வது? அவர்களை திருப்திபடுத்த முடியாது. காரணம் இந்த விவகாரத்தை அவர்கள் அரசியலாக்கி தந்திரம் செய்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Related Tags :
Next Story