சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் போராட்டம்
மோட்டார்வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து செய்யாறு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக செய்யாறு மோட்டார்வாகன ஆய்வாளர் அலுவலகம் வெறிச்சோடியது.
செய்யாறு,
மத்திய அரசு மோட்டார்வாகன சட்டத்தில் திருத்தம் செய்து மசோதாவை வெளியிட உள்ளது. இதன்படி மோட்டார் சைக்கிள் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்.சி என்பது மாறி ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்படும். மோட்டார்சைக்கிள், 4 சக்கர வாகனங்களை மெக்கானிக் பட்டறைகளில் பழுது பார்க்க முடியாது, மாறாக அரசு நிர்ணயிக்கும் ஏஜென்சிகளிடம் மட்டுமே பழுதுபார்க்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வழங்குவது தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். ஓட்டுனர் உரிமம் பெற தேர்வு எழுத வேண்டும். தற்போது ஓட்டுனர் உரிமம் உள்ளவர்களும் மீண்டும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுனர் பயிற்சி பெற்று, தேர்வு எழுதி ஓட்டுனர் உரிமம் பெறவேண்டும். மூன்றாம் நபர் நஷ்டஈடு அதிகபட்சமாக ரூ.5 லட்சமும், காயங்களுக்கு ரூ.2½ லட்சம் என்றும் அதற்குமேல் வரும் நஷ்டஈட்டு தொகையை உரிமையாளரே ஏற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்தம் நவம்பர் மாதம் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட உள்ளது.
தொடர் முழக்க போராட்டம்
பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் சட்டத்திருத்தம் உள்ளதால் இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயமாக அமையும் என்று மோட்டார்வாகன பட்டறை உரிமையாளர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர். இந்த சட்டத்திருத்தத்தினால் மோட்டார்வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், வாகன உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள், பழுதுபார்ப்போர்கள் மற்றும் ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் என பலதரப்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாதிப்பு அம்சங்களை நீக்க வலியுறுத்தி செய்யாறு மற்றும் ஆரணி பகுதிகளை சேர்ந்த ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் நலசங்கத்தினர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.
செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவது, புதுப்பிப்பது உள்பட பல்வேறு பணி நிமித்தம் காரணமாக கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களின் தொடர்முழக்க போராட்டத்தால் மோட்டார்வாகன ஆய்வாளர் அலுவலகம் வெறிச்சோடியது. இந்த போராட்டத்தால் வழக்கமாக கிடைக்கும் வருவாயில் 10 சதவீதம் கூட நேற்று கிடைக்கவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story