நாரணமங்கலம் கண்மாயில் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை மூட கோரிக்கை
நாரணமங்கலம் கண்மாயில் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை மூட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனைக்குளம்,
தேவிபட்டினம் அருகே உள்ளது நாரணமங்கலம் கிராமம். இங்கு சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாய் உள்ளது. ஊருக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த கண்மாயில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பொது கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து தண்ணீரை கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் பருவமழை பொய்த்து விட்டதால் நாரணமங்கலம் கண்மாய் வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக நாரணமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கால்நடைகளும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த கண்மாய் முறையாக தூர்வாரப்படாததால் கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் மண்டிப்போய் கிடக்கிறது. இந்த நிலையில் கண்மாயில் உள்ள பொது கிணறு இடிந்து போய் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆனால் அதை செப்பனிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். ஆனால் அதில் இருந்து தனிநபர் ஒருவர் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருவதை, அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
இந்த மோட்டாரை இயக்க அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்து முறைகேடாக மின்சாரம் எடுத்து வரப்படுகிறது. மேலும் இடிந்து போய் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றின் வழியாக பொதுமக்கள் நடந்து செல்வதாலும், சிறுவர்கள் விளையாடுவதாலும் எந்த நேரமும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இந்த கிணற்றை மூடிவிட்டு, புதிதாக ஒரு கிணற்றை அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story