மால்வாணியில் திருட்டு ஆசாமி என கருதி வாலிபர் கொலை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய 4 பேர் கைது
மால்வாணியில் திருட்டு ஆசாமி என கருதி வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை மால்வாணி மத் ஐலேண்டு பகுதியில் நேற்றுமுன்தினம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து சிலர் அடித்து உதைத்தனர். இதில் அடி தாங்க முடியாமல் அந்த வாலிபர் வேதனையில் துடித்தார். இதுபற்றி மால்வாணி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்வையிட்டனர்.
இதில் நான்கு பேர் சேர்ந்து வாலிபரை சரமாரியாக தாக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து மால்வாணி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குறிப்பிட்ட 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் மத் ஐலேண்டு பகுதியில் திருட முயற்சி செய்ததாகவும், அவர் திருட்டு ஆசாமி என கருதி மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகவும் தெரிவித்தனர்.
கொலையான வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை. போலீசார் அவரை அடையாளம் காண விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story