ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் 50 பேர் கைது


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் 50 பேர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2017 4:15 AM IST (Updated: 11 Oct 2017 6:25 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

பாரதீயஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெய்ஷா ஆகியோர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. எனவே அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று காலை வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெய்ஷா ஆகியோரையும், மத்திய அரசையும் கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் அக்ராவரம் பாஸ்கர், ஜானகிராமன், துரை சீனிவாசன், வீரப்பன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்ததால் இதில் கலந்து கொண்ட 50 பேரை ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


Next Story