குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம்


குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2017 3:30 AM IST (Updated: 12 Oct 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாநகராட்சி 78-வது வார்டு பகுதியான மேல வாசல் பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

மதுரை,

மதுரை மாநகராட்சி 78-வது வார்டு பகுதியான மேல வாசல் பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் சிதம்பரம் தலைமையில் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை யடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story