திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் சாயக்கழிவுநீர் நுரையாக தேங்கியதால் மீண்டும் போக்குவரத்து துண்டிப்பு
வெண்ணந்தூர் அருகே திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் சாயக்கழிவுநீர் கலந்து நுரையாக தேங்கியதால் மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வெண்ணந்தூர்,
சேலத்தில் சேர்வராயன் மலைப்பகுதியில் அதிகளவு மழை பெய்யும்போது அங்கிருந்து வரும் தண்ணீர் திருமணிமுத்தாறு வழியாக சென்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள கூடுதுறை காவிரி ஆற்றில் கலக்கிறது. அப்போது சேலம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீர் மற்றும் சாயக்கழிவு நீரும் திருமணிமுத்தாற்றில் கலக்கிறது.
இதனால் அந்த தண்ணீர் மாசடைந்து அதிகளவு நுங்கும் நுரையுமாக வருகிறது. இவ்வாறு வரும் சாயக்கழிவுநீர் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே மதியம்பட்டி ஏரிக்கும், சவுரிப்பாளையம் ஏரிக்கும் இடையில் திருமணிமுத்தாறு தண்ணீர் வரும் தரைப்பாலத்தில் நுரையாக தேங்கி நிற்கிறது.
இந்த வழியாகத்தான் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். வெண்ணந்தூரில் இருந்து ஆட்டையாம்பட்டி வழியாக திருச்செங்கோடு சென்றால் அதிகதூரம் என்பதால், வெண்ணந்தூரில் இருந்து சவுரிப்பாளையம் வழியாக மல்லசமுத்திரம், திருச்செங்கோடு செல்பவர்கள் அதிகம். ஆனால் தரைமட்ட பாலம் வழியாக அந்த நுரை பல அடி உயரத்துக்கு தேங்கி இருப்பதால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.
இவ்வாறு அடிக்கடி மழை வரும்போதெல்லாம் நுரையாக சாயக்கழிவுநீர் தேங்கி நிற்பதால் இந்த தரைப்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாகவும் இந்த தரைப்பாலத்தில் பல அடி உயரத்திற்கு சாயக்கழிவுநீர் நுரையாக தேங்கி நின்றது. இதனால் நேற்றும் இந்த பகுதியில் மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன்காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும், சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story