வேலைநிறுத்தம் முடிந்து லாரிகள் ஓடின சரக்குகள் அனுப்பும் பணி தொடங்கியது
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் முடிந்து லாரிகள் ஓடத்தொடங்கின. தேங்கி கிடந்த சரக்குகளை அனுப்பும் பணி தொடங்கியது.
கரூர்,
பெட்ரோல், டீசல் விலையை மாதம் ஒரு முறை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் லாரிகள் இயக்கப்படவில்லை. கரூர் மாவட்டத்தில் 2,300 லாரிகள் ஓடவில்லை. 2 நாட்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்தன. ஜவுளிகள் வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் வர்த்தகம் பாதிப்படைந்தது. அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நேற்று முடிந்தது. இதையடுத்து லாரிகள் வழக்கம் போல ஓடத்தொடங்கின.
கரூர் மாவட்டத்திலும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகள் நேற்று காலை முதல் இயக்கப்பட்டன. லாரி புக்கிங் அலுவலகத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் அனைத்தும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றி அனுப்பும் பணி தொடங்கியது. ஜவுளிகள், கொசுவலைகள் மற்றும் இதர சரக்குகளை லாரிகளில் ஏற்றி அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல ஜவுளி நிறுவனங்களுக்கு வரவேண்டிய நூல்கள் மற்றும் உப தொழில்களுக்கு அனுப்பப்பட்ட ஜவுளி ரகங்கள் லாரிகள் மூலம் நிறுவனங்களுக்கு வந்து சேர்ந்தன. மளிகை கடை, அரிசி கடை மொத்த வியாபாரிகளுக்கும் சரக்குகள் லாரிகளில் வந்தன. 2 நாட்களுக்கு பிறகு சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி கிடைத்தது.

Related Tags :
Next Story