நாகர்கோவிலில் பரிதாபம்: டெங்கு காய்ச்சலுக்கு கோவில் பூசாரி சாவு
நாகர்கோவிலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோவில் பூசாரி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வடிவீஸ்வரம் நடராஜபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). குறுந்தெருவில் உள்ள அடைக்கலம் சாஸ்தா கோவிலில் பூசாரியாக இருந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5–ந்தேதி கண்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் அவரை உறவினர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது கண்ணனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அவரை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கண்ணனை அவரது உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலையில் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து கண்ணனின் உறவினர்கள் கூறும் போது “ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கண்ணனுக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை, இதனால் தான் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றனர்.
நாகர்கோவிலில் டெங்கு காய்ச்சலுக்கு கோவில் பூசாரி இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story