அருப்புக்கோட்டையில் விடுதி குளியலறையில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் சாவு


அருப்புக்கோட்டையில் விடுதி குளியலறையில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 12 Oct 2017 5:00 PM IST (Updated: 12 Oct 2017 11:46 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர் நல விடுதி குளியலறையில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

அருப்புக்கோட்டை,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கொலையம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலித்தொழிலாளி. இவரது மகன் முத்துராமச்சந்திரன்(வயது19). இவர் அருப்புக்கோட்டையில் திருச்சுழி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

சுக்கிலநத்தத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் விடுதியில் உள்ள குளியலறையில் நைலான்கயிற்றால் தூக்குப்போட்டு முத்துராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த விடுதி வார்டன் மாடசாமி அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். முத்துராமச்சந்திரன் இந்த துயரமுடிவை தேடிக்கொண்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இவருக்கு 3 சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

Next Story