மழைநீர் தேங்கும் வகையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்: அரசு அலுவலகங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
அரசு அலுவலக வளாகங்களில் மழைநீர் தேங்கும் வகையில் இளநீர் கூடுகள், பிளாஸ்டிக் தம்ளர்கள் போன்ற குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.
தேனி,
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. தினமும் டெங்கு காய்ச்சலால் உயிர் இழப்பு ஏற்பட்டு வருகிறது. டெங்குவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் டெங்குவை பரப்பும் கொசுப் புழுக்கள் உருவாக ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தியதாக 20 ஆயிரம் பேருக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி உள்ளது.
48 மணி நேரத்துக்குள் டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, ரூ.1 லட்சம் அபராதத்துடன் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக இந்த நோட்டீஸ் வழங்கப்பட்ட போதிலும், அரசு அலுவலக வளாகங்களும் டெங்கு காய்ச்சலை பரப்பும் அபாயத்துடன் உள்ளது. தேனி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அப்படி இருக்கையில் இங்குள்ள பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் காபி, டீ குடித்து விட்டு பிளாஸ்டிக் தம்ளர்களை குப்பைத் தொட்டியில் போடாமல், ஜன்னல் வழியாக வெளியே வீசி வருகின்றனர். இதனால், ஜன்னலுக்கு வெளியே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
கட்டிடத்திலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கும் வகையில் தம்ளர்கள் குவிந்து கிடக்கின்றன. இவை அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இதேபோல், கட்டிடத்துக்கு வெளிவளாகத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இங்கு இளநீர் கூடுகள், தம்ளர்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன. இதனால், இவற்றில் மழைநீர் தேங்கி, டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதேபோல், தேனி தாலுகா அலுவலகத்தின் பின்புறமும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் தம்ளர்கள், பழைய பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. மேலும், இங்குள்ள கழிவுநீர் வடிகாலில் குப்பைகள் நிரம்பி, கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனாலும் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.
இதுமட்டுமின்றி தேனி பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அரசு அலுவலக வளாகங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே நேரத்தில், அரசு அதிகாரிகள் தாங்கள் பணியாற்றும் அலுவலக வளாகங்களையும் சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story