சிலை கடத்தல் வழக்கு: கும்பகோணம் கோர்ட்டில் சுபாஷ்சந்திரகபூர் ஆஜர்
சிலை கடத்தல் வழக்கில் கும்பகோணம் கோர்ட்டில் சுபாஷ்சந்திரகபூர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கும்பகோணம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சித்தமல்லியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு 20 சிலைகள் கடத்தப்பட்டன. இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த சுபாஷ்சந்திரகபூரை (வயது57) போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக கும்பகோணம் கோர்ட்டில் நேற்று சுபாஷ்சந்திரகபூரை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 26-ந் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
10 பேர் ஆஜராகவில்லை
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாரிச்சாமி, சஞ்சீவிஅசோகன், சிவக்குமார், கலியபெருமாள், ரெத்தினம், கந்தசாமி ஆகியோர் உள்பட 10 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதேபோல் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோவில் சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையும் வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Related Tags :
Next Story