ஊராட்சி நிதி மோசடி: அதிகாரி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு தடை


ஊராட்சி நிதி மோசடி: அதிகாரி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு தடை
x
தினத்தந்தி 13 Oct 2017 3:45 AM IST (Updated: 13 Oct 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி நிதி மோசடி தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அதிகாரி மீதான வழக்கில் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக 1.9.2016-ல் பணியில் சேர்ந்தேன். படமாத்தூர், இலுப்பக்குடி, குடஞ்சாடி, முடிகண்டம் மற்றும் அரசணிமுத்துப்பட்டி ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் அரசுக்கு 49 லட்சத்து 67 ஆயிரத்து 84 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரித்த குழு கடந்த 14.7.2017-ல் அறிக்கை தாக்கல் செய்தது. இதில் நிதி மோசடி விவரம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும் நிதி இழப்பை கண்காணிக்க தவறியவர்கள் என்று நான் உள்பட 4 அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.

கைது

இதன் முழுவிவரத்தை அறியாமலேயே சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரில் மற்றவர்கள் பெயரை தவிர்த்து என் பெயரை மட்டும் குறிப்பிட்டு உள்ளனர். அதன்பேரில் என் மீதும், சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளேன்.

நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு பிறகு தான் நான் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில் சேர்ந்தேன். அவ்வாறு இருக்கும்போது அதற்கு நான் எப்படி பொறுப்பு ஆக முடியும். மேலும் உயர் அதிகாரிகளின் தலையீட்டால் முறையான விசாரணை நடைபெறவில்லை.

எனவே என் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து தென்மண்டல ஐ.ஜி., சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு, சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப் பவும், விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதுவரை மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். 

Related Tags :
Next Story