பாலீஷ் செய்து தருவதாக ஏமாற்றி பெண்ணிடம் நகையை திருடி சென்ற பீகார் வாலிபர் கைது
கொட்டாம்பட்டி அருகே பாலீஷ் செய்து தருவதாக கூறி பெண்ணிடம் இருந்து நகையை திருடி சென்ற பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள கல்லம்பட்டியை சேர்ந்தவர் குமார். விவசாயி. இவருடைய மனைவி அங்கயற்கண்ணி(வயது 21). கணவர் குமார் வெளியே சென்று விட்டார். இதனால் அங்கயற்கண்ணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் நகைக்கு பாலீஷ் போட்டு தருகிறேன் என கூறியுள்ளார். இதைதொடர்ந்து கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளார்.
வீட்டின் முன்பு அமர்ந்து நகையை பாலீஷ் செய்தார். அப்போது அந்த வாலிபர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். வீட்டின் உள்ளே சென்று அங்கயற்கண்ணி தண்ணீர் எடுத்து வந்து பார்த்தபோது வாலிபரை காணவில்லை. அங்கயற்கண்ணி திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதைகேட்டு அங்கே வந்த அக்கம்பக்கத்தினர் நகையுடன் தப்பிய வாலிபரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கைது
இதுதொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அங்கயற்கண்ணியின் தந்தை வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் போலீசார் கருங்காலக்குடி வைரவன்பட்டியில் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறியுள்ளார்.
போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த தில்குஷ்குமார்(22) என்பதும், கல்லம்பட்டியில் நகை பாலீஷ் செய்து தருவதுபோல் நகையை திருடியதும் அவர் தான் எனவும் தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story