அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததால் போலீசாரை பார்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் ஓட்டம்
தஞ்சை அருகே போலீசாரை பார்த்ததும் நடுவழியில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் ஓட்டம் பிடித்தார். அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததால் அவர் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து கனிமவளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் அவ்வப்போது ரோந்து சென்று அனுமதி இன்றி மணல் அள்ளி வந்த லாரி, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிராமலிங்கம் மற்றும் போலீசார் நேற்று காலை தஞ்சையை அடுத்த பள்ளிஅக்ரஹாரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. லாரியை பார்த்ததும் போலீசார் நிறுத்தும்படி சைகை செய்தனர்.
போலீசார் சைகை செய்வதை பார்த்ததும் டிரைவர் லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லாரிக்கு சென்று பார்த்த போது லாரியில் மணல் இருந்தது தெரிய வந்தது. ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததால் டிரைவர் லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்திருக்கலாம் என போலீசார் கருதினர்.இதையடுத்து லாரியை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். இது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story