ஏலச்சீட்டு நடத்தி ரூ.73 லட்சத்துடன் தம்பதி மாயம் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் மனு
திருப்பூர் கணியாம்பூண்டியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.73 லட்சத்துடன் மாயமான தம்பதி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜனிடம் மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் கணியாம்பூண்டியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கமிஷனர் நாகராஜனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் கோரக்காடு காம்பவுண்டில் வசித்து வந்த எப்சிபா(வயது 50) என்ற பெண் மாத ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அந்த பகுதியில் சீட்டு நடத்தியதால் எங்கள் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் மாத ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தனர்.
கடந்த 6 மாதமாக அவர் ஏலச்சீட்டு நடத்தாமல் இருந்தார். அத்துடன் பணம் செலுத்தியவர்களுக்கும் சரியாக பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு அவரிடம் கேட்டோம். இதற்கு அவர் விரைவில் பணத்தை திருப்பிக்கொடுத்து விடுவதாக கூறி இழுத்தடித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக அவர் அடிக்கடி வெளியூர் சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு முதல் எப்சிபா தனது கணவருடன் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ரூ.73 லட்சத்துக்கும் மேல் நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி தராமல் கணவன்-மனைவி இருவரும் மாயமாகி விட்டனர். அவர்களை கண்டுபிடித்து நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story