விவசாயிகளுக்கு எந்திரம், கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்
விவசாயிகளுக்கு எந்திரம், கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கூறியுள்ளார்.
கரூர்,
மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் 2017-18-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண் எந்திரமயமாக்கலுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.30 கோடி தனிப்பட்ட விவசாயிகள் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிடவும், 590 எண்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்திடவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 8 குதிரை திறன் முதல் 70 குதிரை திறன் வரை சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு எந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சுழல் கலப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, தட்டு வெட்டும் கருவி, டிராக்டரில் இயங்கும் தெளிப்பான் முதலான வேளாண் எந்திரங்களும், கருவிகளும் வாங்கிக்கொள்ள விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையுமான தொகை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிக பட்ச மானிய தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. மானியத்திற்கு தகுதியாக்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் விவரம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் விலை பட்டியல்கள், மானிய விவரங்கள் ஆகியவை மாவட்டத்தின் வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மானிய உதவியுடன் கருவிகளை வாங்க விரும்பும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையில் உரிய நில உரிமை ஆவணங்கள், சிறு அல்லது குறு விவசாயி சான்று, ஆதார் போன்ற அடையாள ஆவணங்களுடன் விண்ணப்பித்து பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story