உயிரிழப்புகள் அதிகரிப்பு: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை
டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசு மீது முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் குற்றம் சாட்டினார்.
தர்மபுரி,
தர்மபுரி நகர அ.தி.மு.க. (அம்மா அணி) சார்பில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி முன்னிலை வகித்தார். தர்மபுரி நகர செயலாளர் எம்.ஜி. மணிவண்ணன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. (அம்மா அணி) தலைமை நிலைய செயலாளருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியில் அ.தி.மு.க. (அம்மா அணி) தொண்டர்கள் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரும் சுகாதார பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் ஜெயலலிதா எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கு எந்தவிதமான தொற்றுநோயும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதற்கு அவருடைய நிர்வாக திறமையே காரணம்.
தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது தற்போதைய முதல்-அமைச்சரின் நிர்வாகத்திறமையின்மையையே காட்டுகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், குப்புசாமி, கவுதமன், கணேசன், நகர பேரவை செயலாளர் பெருமாள், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் ராமன், ராஜா, குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story