கிருஷ்ணகிரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்


கிருஷ்ணகிரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 13 Oct 2017 5:00 PM IST (Updated: 13 Oct 2017 12:14 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை இணைந்து,

கிருஷ்ணகிரி,

ரத்ததான மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதார பணிகள் நடைபெற்றது.

இதை மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நீதிமன்ற பணியாளர்கள், வக்கீல்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், பப்பாளி இலை சாறு ஆகியவற்றை வழங்கினார்கள். தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அதன் பின்னர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதை கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பிரதிவாரம் வியாழக்கிழமை கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டபணிகள் ஆணையக்குழு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதரத்துறை இணைந்து, ரத்ததான மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதார பணிகள் மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

டெங்கு ஒழிப்பில் பொதுமக்கள் அரசு அலுவலர்கள், வக்கீல்கள், கல்லூரி மாணவர்கள் என ஒவ்வொருவரும் உறுதி ஏற்றுக்கொண்டு கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும். குறிப்பாக ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் பயன்பாட்டில் இல்லாத பொருட்களில் தேங்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். வீட்டில் உபயோகப்படுத்தும் தண்ணீர் பாத்திரங்களை வாரத்திற்கு ஒரு முறை பிளச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கொசு உற்பத்தியாவதை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மக்கள் நீதிமன்ற நீதிபதி அறிவொளி, மாவட்ட சட்டபணிகள் ஆணைகள் குழு செயலாளர் தஸ்னிம், மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, முதன்மை சார்பு நீதிபதி ஜெயஸ்ரீ, சிறப்பு சார்பு நீதிபதி கே.ஆர்.லீலா, கூடுதல் சார்பு நீதிபதி சசிகலா, கிருஷ்ணகிரி ஜே.எம்.2 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ஜெயபிரகாஷ், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அருண், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், சுகாதார பணிகள் இணை இயக்குனர் அசோக்குமார், நலப்பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ், வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் கே.ஆர்.பாண்டியன், யுவராஜ், விஜயகுமாரி சேகர், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ், நகர சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Next Story