நரிமணம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்: 82 பயனாளிகளுக்கு ரூ.23¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 82 பயனாளிகளுக்கு ரூ.23¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.
திட்டச்சேரி,
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், நரிமணம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து 102 மனுக்கள் பெறப்பட்டு, 56 மனுக்கள் ஏற்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-
இந்த மக்கள் தொடர்பு முகாம் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மாதந்தோறும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் துறை சார்ந்த பல திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்களே மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். பொதுமக்கள் தமிழக அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய சார்பில் 82 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ் குமார் வழங்கினார்.முகாமில் தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.
இதில் நாகை உதவி கலெக்டர் கண்ணன், இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு) கோவிந்தன், தோட்டக்கலை உதவி இயக்குனர் பொன்னி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் மதுமதி, திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராதாகிருட்டிணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார் ராகவன், தோட்டக்கலைத்துறை அலுவலர் முத்தையா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story