கம்பம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு
கம்பம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
கம்பம்,
தமிழகத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ‘ஏடிஸ்‘ கொசு ஒழிப்பு விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.
மருத்துவ அலுவலர் பொன்னரசன் தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் இருந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுமட்டுமின்றி கம்பம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தொடங்கப்பட்டது. இதில் ஆண்கள் , பெண்கள், குழந்தைகளுக்கு தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, கொசுவலையுடன் கூடிய 40 படுக்கைகள் உள்ளன. இது குறித்து மருத்துவ அலுவலர் பொன்னரசன் கூறியதாவது:-
வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்களை வாரத்துக்கு ஒருமுறையாவது கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொசுக்கள் உள்ளே புகாத அளவுக்கு பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். வைரஸ் காய்ச்சல் நோய் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
ஆரம்பத்திலேயே காய்ச்சலை கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தி விடலாம். காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக எவ்வித மருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டாம். அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். கம்பம் மருத்துவமனையில் சித்தமருத்துவ பிரிவு மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் வாங்கி குடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

தனி வார்டு தொடக்கம்

Related Tags :
Next Story