தாம்பரம், பெருங்களத்தூரில் முன்பதிவு செய்தவர்கள் ஊரப்பாக்கத்தில் பஸ் ஏற வேண்டும்


தாம்பரம், பெருங்களத்தூரில் முன்பதிவு செய்தவர்கள் ஊரப்பாக்கத்தில் பஸ் ஏற வேண்டும்
x
தினத்தந்தி 14 Oct 2017 4:45 AM IST (Updated: 14 Oct 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் இருந்து செல்லும்வகையில் முன்பதிவு செய்த பயணிகள் ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பஸ் நிறுத்தம் சென்று பயணம் மேற்கொள்ள வேண்டும்.

தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்ட பஸ்கள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூந்தமல்லி, நசரத்பேட்டை வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்லும்.

தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் இருந்து செல்லும்வகையில் முன்பதிவு செய்த பயணிகள் ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பஸ் நிறுத்தம் சென்று அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பஸ்களில் பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த பஸ் நிலையத் திலிருந்து முன்பதிவில்லாமல் எந்த பஸ்சும் புறப்படாது.

போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்ய, 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும்.

இந்த தகவல்களை தமிழக அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. 

Next Story