தீபாவளி சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்ய கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் 29 சிறப்பு கவுண்ட்டர்கள்
சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்வதற்காக கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 29 சிறப்பு கவுண்ட்டர்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
சென்னை,
சென்னையில் இருந்து 15, 16 மற்றும் 17-ந் தேதிகளில் 11,645 பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளன. 15-ந் தேதி 3,063 பஸ்களும், 16-ந்தேதி 4,119 பஸ்களும், 17-ந்தேதி 4,463 பஸ்களும் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 11 ஆயிரத்து 111 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 300 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்பு பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
சிறப்பு கவுண்ட்டர்கள்
கம்ப்யூட்டர் மூலம் உடனடி முன்பதிவு செய்யும் வகையில் பொதுமக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர், தாம்பரம் சானிட்டோரியத்தில் 2 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர் என மொத்தம் 29 கவுண்ட்டர் கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்துவைத்து, முன்பதிவை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பி.டபுள்யூ.சி.டேவிதார், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக் குனர் வீ.கிருஷ்ணமூர்த்தி, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் அனந்த பத்மநாபன் மற்றும் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story