அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் நாகர்கோவிலில் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 20 சதவீத போனஸ் மற்றும் 10 சதவீத கருணை தொகை வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் போனஸ் குறித்து ரப்பர் கழக நிர்வாகம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக அனைத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன் நேற்றுமுன்தினம் காலை முதல் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வல்சகுமார் தலைமை தாங்கினார். இந்த போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற் றது. அப்போது ரப்பர் கழக தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டம் தொடர்பாக வல்சகுமார் நிருபரிடம் கூறும்போது, ‘அரசு ரப்பர் கழக அதிகாரி எங்களுடன் பேசினார். அப்போது ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு அரசு இன்னும் போனஸ் அறிவிக்கவில்லை என்றார். போனஸ் தொடர்பான அரசு உத்தரவு வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’ என்று குறிப்பிட்டார்.
போராட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், தொ.மு.ச.நிர்வாகி சுகுமாரன், பி.எம்.எஸ்., அன்னை சோனியா ராகுல் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
நேற்று காலையில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்தார். அவர் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களின் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினார்.
ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலக வளாகத்திலேயே உணவு சமைத்து தொழிலாளர்களுக்கு பரிமாறப்பட்டது.
மேலும், ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சி.ஐ.டி.யு. குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். துணை தலைவர் அந்தோணி, செயலாளர் தங்கமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் அஜீஸ், லட்சுமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story