டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு அரசு முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் அறிவுரை வழங்கினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கை மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான பிரதீப்யாதவ் தலைமை தாங்கி பேசியதாவது:-
டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கை குறித்து வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடிநீர் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வதற்கு பதிலாக 7 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். சுகாதார பணிகளை மேற்பார்வையிட அமைக்கப்பட்டுள்ள குழுவினர் காலை 6 மணி முதல் 10 மணி வரை களப்பணியாற்ற வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து துப்புரவு பணியாளர்களை கொண்டு அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
தஞ்சை மாநகராட்சியில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை கண்டறிந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதுபோன்று அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளிலும் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற நிலையில் இருந்தால் அபராதம் விதிக்க வேண்டும். அனைத்து அரசுத்துறை அலுவலகங்களையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். தூய்மையாக வைத்து கொள்ளாத அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ள உடைந்த பாத்திரங்கள், தேங்காய் சிரட்டைகள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு துறையினரும் திறம்பட மேற்கொள்ள வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகளை சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்படாத வண்ணம் கரைகளை பலப்படுத்த வேண்டும். போதுமான அளவுக்கு மணல் மூட்டைகளை வைத்திருக்க வேண்டும்.
வெள்ள காலங்களில் பாதிக்கப்படும் மக்களை மீட்க தேவையான அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தேவையான அளவு அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகேசன், தஞ்சை மருத்துவகல்லூரி முதல்வர் ஜெயக்குமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை அரசு முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் நேரில் பார்த்து, காய்ச்சலின் தன்மை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர், தஞ்சை முனிசிபல் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். தொடர்ந்து அவர், பொன்நகர் வாரி தூர்வாரப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கலெக்டர் அண்ணாதுரை, மாநகராட்சி ஆணையாளர் வரதராஜ், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ஜெயசேகர், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட மலேரியா அலுவலர் போத்திபிள்ளை ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story