கொச்சி அருகே விசைப்படகு மீது மர்ம கப்பல் மோதியது; குமரி மீனவர்கள் உள்பட 4 பேர் கதி என்ன?
கொச்சி அருகே நடுக்கடலில் இரவில் விசைப்படகு மீது மர்ம கப்பல் பயங்கரமாக மோதியதில் அந்த விசைப்படகு நொறுங்கியது. அந்த படகில் இருந்து குமரி மீனவர்கள் உள்பட 6 பேர் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அதில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கடலில் மூழ்கிய மற்ற 4 பேரின் கதி என்ன என்பது மர்மமாக உள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சின்னத்துறையை சேர்ந்தவர் சேவியர் மகன் ஆன்டனி (வயது 35). இவர் தனக்கு சொந்தமான விசைப்படகு மூலம் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அந்த விசைப்படகில் அவரும், அவருடைய தந்தை சேவியர் (58), சின்னத்துறையை சேர்ந்த ரம்யாஸ், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (30), கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்த ஜான்சன் (18), பிரின்ஸ் (26) ஆகியோர் கடந்த 11-ந் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் இரவு 9 மணி அளவில் கொச்சியில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மர்ம கப்பல் இவர்களது படகு மீது பயங்கரமாக மோதியது. பிறகு அந்த கப்பல் நிற்காமல் சென்றுவிட்டது.
கப்பல் மோதிய வேகத்தில் விசை படகு உடைந்து நொறுங்கியது. படகில் இருந்த 6 பேரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். இதில் சின்னத்துறையை சேர்ந்த ஆன்டனி, ரம்யாஸ், பொழியூரை சேர்ந்த ஜான்சன், பிரின்ஸ் ஆகிய 4 பேரும் கடலில் மூழ்கினர். குமரியை சேர்ந்த சேவியரும், ராதாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயனும் படகின் உடைந்த பாகங்களை பிடித்து கொண்டு கடலில் விடிய, விடிய தத்தளித்தனர்.
இந்தநிலையில் கொச்சி கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் அந்த வழியாக ரோந்து சென்றனர். அப்போது, கடலில் விசைப்படகின் உடைந்த பாகங்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போது, நடுக்கடலில் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த சேவியரையும், கார்த்திகேயனையும் கண்டனர். உடனே அவர்கள் இருவரையும் மீட்டு படகு மூலம் கரைக்கு கொண்டு வந்து கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதற்கிடையே கடலில் மூழ்கிய மற்ற 4 மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் மீனவர்களும், கடலோர காவல்படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கடலில் மூழ்கிய குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆன்டனி, ரம்யாஸ் உள்பட 4 மீனவர்களின் குடும்பத்தினரை கடலோர காவல் படையினர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். விசைப்படகில் மர்ம கப்பல் மோதியதையும் உறுதி செய்துள்ளனர். இதனால் மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

Related Tags :
Next Story