டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசின் நடவடிக்கைகளில் மத்திய சுகாதார குழுவுக்கு திருப்தி
தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
செம்பட்டு,
தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, பூனாட்சி உள்பட அ.தி.மு.க. பிரமுகர்கள் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில் ‘பிரதமர் மோடி ஆணையின்படி மத்திய சுகாதார குழுவினர் தமிழகத்திற்கு வந்து உள்ளனர். அவர்கள் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு எடுத்து வருகிற பல்வேறு நடவடிக்கைகளை, மருத்துவ முகாம்கள் உள்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு உள்ளனர். இந்த பணிகள் தங்களுக்கு முழு திருப்தி அளிப்பதாக பாராட்டு தெரிவித்து உள்ளனர்’ என்றார்.
Related Tags :
Next Story