குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றில் பொதுமக்களே அமைத்த மூங்கில் பாலம்
குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் மூங்கிலால் ஆன தற்காலிக பாலத்தை பொதுமக்கள் அமைத்தனர். நிரந்தர பாலம் கட்டித்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் மோர்தானா அணை உள்ளது. இந்த அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பியதால், அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் கவுண்டன்ய ஆற்றில் செல்கிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது, எனவே, மோர்தானா அணை அருகே உள்ள போடியப்பனூர், ராகிமானபல்லி ஆகிய கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இந்த 2 கிராமங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஆற்றை கடந்து மோர்தானா கிராமத்திற்கு வந்து அங்கிருந்து குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல முடியும்.
தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்ல முடியாமல் பொதுமக்களும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமலும் கடும் அவதி அடைந்துள்ளனர். அணையில் இருந்து தண்ணீர் செல்லும் போது எல்லாம் இதே நிலைமை தான் உள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள், மூங்கிலால் ஆன பாலத்தை தற்காலிகமாக அமைத்துள்ளனர். இதனையடுத்து மூங்கில் பாலத்தின் வழியாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து சென்று வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த ஆற்றுப்பகுதியில் பாலம் கட்டித்தரக்கோரி பல ஆண்டுகளாக அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது நாங்கள் மூங்கிலால் ஆன தற்காலிக பாலத்தை அமைத்து உள்ளோம். இதன்பிறகாவது அதிகாரிகள் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் காலங்களில் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம்’ என்றனர்.

Related Tags :
Next Story