செவிலியர்களை சுகாதார நிலையத்திற்குள் வைத்து பூட்டியவர் கைது


செவிலியர்களை சுகாதார நிலையத்திற்குள் வைத்து பூட்டியவர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2017 11:54 AM IST (Updated: 14 Oct 2017 11:56 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள நத்தமேட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

பொம்மிடி,

அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று நல்லம்பள்ளியில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணியை தொடங்கி வைக்க வந்தார். இதையொட்டி அவர் மோட்டாங்குறிச்சிக்கு சென்றார். அங்கு சுகாதார பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

அன்புமணி ராமதாஸ் எம்.பி. வருவதை முன்னிட்டு நத்தமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறப்பு பணிக்காக 6 செவிலியர்கள் வந்திருந்தனர். அவர்களை அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பவர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் வைத்து நேற்று மதியம் பூட்டினார். இதுகுறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீசார் அங்கு விரைந்து சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தின் பூட்டை திறந்து விட்டனர். மேலும் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கடந்த மாதம் இப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தான். இந்த சிறப்பு செவிலியர்கள் அப்போதே வந்திருந்தால் சிறுவன் உயிரிழந்திருக்க மாட்டான். அந்த ஆத்திரத்தில்தான் செவிலியர்களை சிறைபிடித்தேன் என செந்தில்குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Next Story