குடிபோதையால் ஏற்பட்ட விபரீதம் விருதுநகரில் வாலிபர் அடித்துக் கொலை


குடிபோதையால் ஏற்பட்ட விபரீதம் விருதுநகரில் வாலிபர் அடித்துக் கொலை
x
தினத்தந்தி 14 Oct 2017 1:42 PM IST (Updated: 14 Oct 2017 1:42 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் குடிபோதையால் ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் மல்லிகிட்டங்கியைச் சேர்ந்தவர் பாண்டி(வயது 28). திருமணமாகாத இவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். இவர் மீது விருதுநகர் மற்றும் டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. தற்போது ஜாமீனில் இருந் தார். நேற்று மாலை பாண்டி தனது நண்பர்களுடன் ஒரு ஆட்டோவில் விருதுநகர் பேராலி ரோட்டில் உள்ள ஏர்ரநாயக்கன் ஊருணி அருகே சென்றதாக கூறப்படுகின்றது.

அங்கு மது குடித்த பின்பு பாண்டியுடன் சென்ற ஒருவருக்கும், பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் அந்த நபர் பாண்டியை கட்டையால் அடித்ததில் பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோவில் வந்த அவர்கள் உடனே அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இது பற்றி தகவலறிந்த கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருது நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியுடன் சென்ற கும்பல் யார் அதில் பாண்டியை தாக்கிய நபர் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story