தனியார் ரத்த பரிசோதனை நிலையத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கிய தனியார் ரத்த பரிசோதனை நிலையத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
காரைக்குடி,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் சார்பிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சப்-கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடி நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள், தாசில்தார் மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நகராட்சி சுகாதார பிரிவின் தனிப்படையினர் காரைக்குடி நகரின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், விடுதிகள், திருமண மண்டபங்கள், வீடுகள், தனியார் மருத்துவமனைகள், ரத்த பரிசோதனை நிலையங்கள் ஆகியவற்றில் இந்த சோதனைகளை நடத்தினர். அப்போது காரைக்குடி டி.டி நகரில் உள்ள ரத்த பரிசோதனை நிலையத்தில் நடைபெற்ற சோதனையின் போது அங்கு சரியான முறையில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை கண்டறிவதற்கான உபகரண பொருட்கள் ஏதும் இல்லை என கண்டறியப்பட்டது.
இதுதவிர டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் அங்கு தண்ணீர் தேங்கி கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பரிசோதனை கழிவுகள், மருந்துகள், ஊசி கழிவுகள் அங்கு இருந்ததாகவும் அதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் வகையில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதைதொடர்ந்து அந்த பரிசோதனை நிலையத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஆய்வுகளை மேற்கொண்ட அதிகாரிகள் 3 தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரகேடாக இருந்ததாக தலா ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related Tags :
Next Story