நாகர்கோவிலில் பலத்த மழை சாலைகளில் வெள்ளம்; பள்ளத்தில் பஸ் சிக்கியது
நாகர்கோவிலில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளத்தில் பஸ் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகர்கோவில்,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியின் வளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்சி தற்போது அங்கிருந்து நகர்ந்து கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருப்பதால் தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. நாகர்கோவில் பகுதியில் காலை 8.45 மணிக்கு மழை தொடங்கியது. முதலில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரம் மழை நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அவ்வை சண்முகம் சாலை, கோர்ட்டு ரோடு, கேப் ரோடு, கே.பி. ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை மற்றும் பறக்கை ரோடு சந்திப்பில் இருந்து இடலாக்குடி செல்லும் சாலையில் மழை நீர் ஆறு போல ஓடியது. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மழை நீர் வடிந்து செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் சாலையில் சுமார் 3 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக அந்த சாலையில் வானங்கள் செல்ல சிரமப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுபோல் பறக்கை ரோடு சந்திப்பில் இருந்து இடலாக்குடி செல்லும் சாலையில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. சாலையில் தண்ணீர் வடிந்தோடிய பிறகு குப்பைகளாக கிடந்தன. இதற்கிடையே காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் மழை இல்லாமல் இருந்தது. பின்னர் 11 மணிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை பகல் 2 மணி வரை மிதமாக பெய்து கொண்டே இருந்தது. இதுபோல், மார்த்தாண்டம், குளச்சல், குலசேகரம், தக்கலை, திருவட்டார் உள்பட மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.
நாகர்கோவிலில் மழை காரணமாக பீச்ரோடு–செட்டிகுளம் சாலையில் அதிகமான சகதி படிந்திருந்தது. அந்த சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து பல வாரங்கள் ஆகிய பிறகு இன்னும் சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் நேற்று காலை பீச்ரோடு சந்திப்பில் இருந்து செட்டிகுளம் நோக்கி வந்த ஒரு அரசு பஸ், இந்து கல்லூரி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் பஸ்சின் முன்புற சக்கரம் சிக்கிக் கொண்டது.
பள்ளம் முழுவதும் சகதியாக இருந்ததால் டிரைவர் எவ்வளவோ முயற்சி செய்தும் பஸ்சை வெளியே கொண்டு வர முடியவில்லை. அதைத் தொடர்ந்து மீட்பு வாகனம் வந்து அந்த பஸ்சை அங்கிருந்து இழுத்து சென்றது.
பஸ் பள்ளத்தில் சிக்கிக்கொண்டதால் அங்கு சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபோல் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள முருகன் கோவில் அருகே நின்ற ஒரு தென்னை மரம் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பிகள் மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து தரையில் விழுந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மின்சாரத்தை தடை செய்தனர். பின்னர், அறுந்த மின் கம்பிகளை சரிசெய்யும் பணி நடந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மின்கம்பிகள் மட்டும் சேதம் அடைந்தது.
மழைகாரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 596 கனஅடி வீதமும், பெருஞ்சாணி அணைக்கு 498 கனஅடி வீதமும், சிற்றாறு 1 அணைக்கு 100 கனஅடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 700 கனஅடி வீதமும், பெருஞ்சாணி அணையில் இருந்து 301 கனஅடி வீதமும், சிற்றாறு 1 அணையில் 100 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Tags :
Next Story