வெள்ளப்பெருக்கு காரணமாக பாலாற்று தரைப்பாலம் மூழ்கியது போக்குவரத்து துண்டிப்பு
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விரிஞ்சிபுரம் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் பக்கத்து மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக வறண்டு கிடந்த பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைகளும் நிரம்பி விட்டன. மேலும் சில ஏரி, குளங்களும் முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது.
வேலூரை அடுத்த செதுவாலை அருகே உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றில் தரைப்பாலம் 1965-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த தரைப்பாலத்தை தான் விரிஞ்சிபுரம், வடுகன்தாங்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களும் போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலாற்றில் ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது. சுமார் 3 அடிக்கு மேல் பாலத்தின் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று தரைப்பாலம் வழியாக செல்லும் தண்ணீரை பார்வையிட்டனர். சிலர் வெள்ளத்தை வரவேற்று மலர்தூவி, பூஜை செய்து வழிபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அபாய எச்சரிக்கை பலகை வைத்தனர். தொடர்ந்து போலீசார் அங்கு நின்று தரைப்பாலம் வழியாக பொதுமக்கள், வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். மேலும் பொதுமக்கள் பாலாற்றில் இறங்கி செல்லாமல் தடுப்பதற்காக 30-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஆனாலும் சிறுவர்கள், இளைஞர்கள் சிலர் தண்ணீரில் குளித்து, மீன்பிடித்து மகிழ்ந்தனர். தரைப்பாலத்தை தவிர்த்து வேறு வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி காட்பாடி மற்றும் வேலூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்பட்டதால் பொதுமக்கள் சிலர் தங்கள் குடும்பத்துடன் ஆபத்தை உணராமல் தண்ணீரில் நடந்து கடந்து சென்றனர்.
விரிஞ்சிபுரம் பாலாற்று தரைப்பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டதால் விரிஞ்சிபுரம், வடுகன்தாங்கல் பகுதிகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள்.
இதன்காரணமாக விரிஞ்சிபுரம், வடுகன்தாங்கல், செதுவாலை மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி காட்பாடி மற்றும் வேலூருக்கு சென்று வருகிறார்கள்.

Related Tags :
Next Story