டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி விலக வேண்டும்
புதுவையில் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்காத அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நல்ல செயல்பாட்டுடன் லாபகரமாக இயங்கி வந்த பி.ஆர்.டி.சி, பாசிக், பாப்ஸ்கோ, பாண்லோ, பாண்டெக்ஸ், பாண்பேப் மற்றும் ஏ.எப்.டி. மில், சுதேசி மில், பாரதி மில் போன்ற அரசு சார்பு நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டு காலமாக ஆட்சியாளர்களின் சுரண்டலால் நஷ்டத்தில் இயங்குகிறது. ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த பிரச்சினையில் போர்க்கால நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதிதிராவிட மக்களின் கல்வி வேலைவாய்ப்பு, பொது சுகாதாரம், கட்டமைப்பு போன்ற சமூக வளர்ச்சிக்கான தனி நிதி 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், முறைகேடாக அரசின் பொது பயன்பாட்டிற்காக செலவழிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட கொள்முதலில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
புதுவை மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு புதுவை அரசும், சுகாதாரத் துறையும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுக்காத சுகாதாரத் துறைக்கும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கும் பா.ஜ.க. கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் அவர் பதவி விலக வேண்டும்.
புதுவை அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. அரசின் இயலாமையை மூடி மறைக்க மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றும், கவர்னர் அனைத்து திட்டங்களையும் தடுத்து நிறுத்துகிறார் என்றும் குறைகூறி அவதூறு பரப்பும் காங்கிரஸ் அரசையும், முதல்- அமைச்சரையும் பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story