சேலம், ஓமலூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம், ஓமலூர் பகுதிகளில் நேற்று மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் வீடு, வீடாக சென்று தண்ணீரில் கொசுப்புழுக்கள் உள்ளதா? என பார்வையிட்டனர்.
சேலம்,
தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்ய மத்திய குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். பின்னர், அவர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சென்று டெங்கு பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மத்திய குழுவில் இடம் பெற்றுள்ள குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் சுவாதி டுப்ளஸ், நோய் தடுப்பியல் வல்லுனர் வினய் கார்க், பூச்சியினால் பரவும் நோய் தடுப்பு ஆலோசகர் கவுசல்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று சேலம் வந்தனர். பின்னர், அவர்கள் முதலில் ஓமலூருக்கு சென்று அங்கு கிராமம், கிராமமாக டெங்கு பாதிப்புகள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
குறிப்பாக காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட கோட்டகவுண்டம்பட்டி, பல்பாக்கி ஆகிய கிராமங்களில் வீடு, வீடாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர், அங்கிருந்த பொதுமக்களிடம் காய்ச்சல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். அப்போது, டெங்கு கொசு உருவாவது பற்றியும், அதனை தடுக்கும் பணிகள் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினர். இதையடுத்து ஓமலூரை சேர்ந்த டாக்டர்களிடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மத்திய குழுவினர் கேட்டறிந்தனர்.
இது தொடர்பாக மத்திய குழுவை சேர்ந்த கவுசல்குமார் நிருபர்களிடம் கூறும்போது, ஓமலூர் பகுதியில் சாதாரண காய்ச்சல்தான் உள்ளது. இதை கட்டுப்படுத்த முடியும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மாவட்ட மருத்துவக்குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கொசுக்கள் பரவாமல் இருக்க பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைக்க வேண்டும். இறப்பு தணிக்கை குழு கொடுத்துள்ள அறிக்கையின்படி டெங்கு காய்ச்சலால் 40 பேர் மட்டுமே இறந்துள்ளனர். வேறு காரணங்களால் பலர் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த இறப்புகளுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றார்.
இதையடுத்து சேலம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். மத்திய குழுவை சேர்ந்த வினய்குமார், கவுசல்குமார் ஆகியோர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செவ்வாய்பேட்டை தேவாங்கபுரம், பால் மார்க்கெட், அரிசிபாளையம் பகுதிகளுக்கு மத்திய குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீர் தொட்டிகள், கடைகள், வீடுகளில் சேமித்து வைத்திருந்த தண்ணீரில் கொசுப்புழு ஏதேனும் இருக்கிறதா? என்று பார்வையிட்டனர். மேலும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க பொதுமக்கள் தங்களது இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இதேபோல், மத்திய குழுவை சேர்ந்த குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் சுவாதி டுப்ளஸ் நேற்று மதியம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து, டெங்கு மற்றும் இதர காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு செயலாளர் செந்தில்ராஜ், அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் இன்பசேகரன், துணை இயக்குனர் பூங்கொடி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story