பெங்களூருவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா, ஆலப்புழாவுக்கு சொகுசு பஸ் சேவை தொடக்கம்


பெங்களூருவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா, ஆலப்புழாவுக்கு சொகுசு பஸ் சேவை தொடக்கம்
x
தினத்தந்தி 15 Oct 2017 4:01 AM IST (Updated: 15 Oct 2017 4:00 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீஹரிகோட்டா மற்றும் கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு புதிய சொகுசு பஸ் சேவைகள் நேற்று தொடங்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் பெங்களூருவில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு புதிய சொகுசு பஸ் சேவைகள் நேற்று தொடங்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி.யின் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், போக்குவரத்து துறை மந்திரி ரேவண்ணா, கர்நாடக காங்கிரஸ் மேலிட தலைவர் வேணுகோபால் ஆகியோர் கொடியசைத்து பஸ்களின் சேவைகளை தொடங்கி வைத்தனர்.

அதன்படி, பெங்களூருவில் இருந்து தினமும் காலை 10 மணிக்கு புறப்படும் சொகுசு பஸ் அன்று மாலை 5.15 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவை சென்றடையும். மறுமார்க்கமாக, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தினமும் இரவு 8.30 மணிக்கு புறப்படும் சொகுசு பஸ் அதிகாலை 4 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இந்த பஸ்களில் பயணம் செய்ய பயணி ஒருவருக்கு ரூ.790 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், பெங்களூருவில் இருந்து தினமும் மாலை 5.45 மணிக்கு புறப்படும் சொகுசு பஸ் மறுநாள் காலை 7 மணிக்கு ஆலப்புழாவை சென்றடையும். மறுமார்க்கமாக ஆலப்புழாவில் இருந்து தினமும் மாலை 7 மணிக்கு புறப்படும் சொகுசு பஸ் மறுநாள் காலை 6.30 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இந்த பஸ்சில் பயணம் செய்ய பயணி ஒருவருக்கு ரூ.1,205 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், கே.எஸ்.ஆர்.டி.சி. துணை தலைவர் பசவராஜ் புல்லா, நிர்வாக இயக்குனர் உமாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story