‘இரட்டை இலை சின்னம் எங்கள் அணிக்கே கிடைக்கும்’ கடலூரில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி


‘இரட்டை இலை சின்னம் எங்கள் அணிக்கே கிடைக்கும்’ கடலூரில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2017 4:00 AM IST (Updated: 16 Oct 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

‘இரட்டை இலை சின்னம் எங்கள் அணிக்கே கிடைக்கும்’ என்று கடலூரில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.

கடலூர்,

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. (அம்மா அணி) மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

மாவட்ட அவை தலைவர் ஜி.ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், சாமிக்கண்ணு, ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சி.கே.எஸ். கார்த்திகேயன் வரவேற்றார். நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் சந்தானம், நகர பேரவை செயலாளர் அசோக், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் ரமேஷ், பண்ருட்டி நகர செயலாளர் சக்திவேல், மாவட்ட மகளிரணி மஞ்சுளா, கம் சலா, முன்னாள் நகர பேரவை செயலாளர் சி.கே.எஸ். சண்முகம், ரவி, மாநில துணை செயலாளர் பழனிவேல், நிர்வாகிகள் அசோக், சிவஞானம், குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கலைச்செல்வன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சின்னத்தை வெல்வோம்

இரட்டை சிலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நாளை(இன்று), நாளை மறுநாள் (நாளை) ஆகிய 2 நாட்கள் விசாரணை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக நான் உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் டெல்லி செல்கிறோம்.

இரட்டை சிலை சின்னம் எங்கள் அணிக்கே கிடைக்கும். ஏனென்றால் எங்களுடன் இருந்து தான் ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்றார். தற்போது மீண்டும் இங்கேயே வந்து விட்டார். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வக்கீலுடன் சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் அவர்கள் கேட்கிற ஆவணங்களை அளிப்போம். ஏற்கனவே தேவையான ஆவணங்களை அளித்து இருக்கிறோம். இரட்டை சிலை சின்னத்தை டி.டி.வி.தினகரன் தலைமையில் வெல்வோம். இவ்வாறு கலைச்செல்வன் எம்.எல்.ஏ. கூறினார். 

Related Tags :
Next Story