திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு


திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Oct 2017 4:30 AM IST (Updated: 16 Oct 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டத்திற்கு டெங்கு ஒழிப்பு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக தமிழ்நாடு கூட்டுறவு நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் ஆய்வு பணியை தொடங்கினார்.

2-வது நாளான நேற்று திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அவரும், மாவட்ட கலெக்டர் வெங்கடேசும் ஆய்வு செய்தனர். அவர்கள் அவசர சிகிச்சை பிரிவு, காய்ச்சல் வார்டு, அரசு ஆஸ்பத்திரி வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கும்படி அவர்கள் அறிவுரை வழங்கினர்.

பின்னர் குமார் ஜெயந்த் நிருபர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. அதே சமயம் டெங்கு ஒழிப்பு குறித்து அதிகாரிகளை கொண்டு கண்காணித்து வருகிறோம் என்றார்.

இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லதா, திருச்செந்தூர் தாசில்தார் அழகர், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி ஆகியோர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story