ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 659 பயிற்சிப் பணிகள்
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பாரத மிகுமின் நிறுவனம் மற்றும் கப்பல்தளம் போன்றவற்றில் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 659 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என்று அழைக் கப்படுகிறது. இதன் கிளை ஒன்று திருச்சிராப்பள்ளியில் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 554 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக பிட்டர் பிரிவில் 210 பேரும், வெல்டர் பிரிவில் 130 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். இது தவிர டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், மெக் கானிக், டிராட்ஸ்மேன், சிஸ்டம் அட்மின், கார்பெண்டர், பிளம்பர், எம்.எல்.டி. பேதாலஜி போன்ற பிரிவிலும் கணிசமான பணியிடங்கள் உள்ளன.
இந்த பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-10-2017-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் www.apprenticeship.gov.in என்ற இணையதளம் சென்று தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு, பின்னர், பெல் நிறுவன இணைய பக்கமான https://web.bheltry.co.in சென்று விண்ணப்பிக்க வேண்டும். 18-10-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
இது பற்றிய விரிவான விவரங்களையும் இந்த இளையதள பக்கத்தில் பார்க்கலாம்.
கப்பல் தளம்
இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களை பழுதுபார்க்கும் பணிமனை ஒன்று கர்நாடக மாநிலம் கர்வாரில் செயல்படுகிறது. தற்போது இந்த கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். ஆண்கள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.
மெஷினிஸ்ட், பிளம்பர், மெக் கானிக் (டீசல்), பிட்டர், மெக்கானிக் (ரெப் அண்ட் ஏ.சி.), எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரீசியன், வெல்டர், பெயிண்டர், கார்பெண்டர், டெயிலரிங், ஷீட் மெட்டல் ஒர்க்கர், மெக்கானிக் (மெஷின் டூல் மெயின்டனன்ஸ்), மோட்டார் வெகிகிள் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பில்டிங் மெயின்டனன்ஸ் போன்ற பிரிவில் பயிற்சிப் பணிகள் உள்ளன. மொத்தம் 105 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மேற்கண்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்து என்.சி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.apprenticeship.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பித்துவிட்டு, அதை நகல் எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடையும் வகையில் அனுப்பப்பட வேண்டும். விரிவான விவரங்களை அக்டோபர் 7-13 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கவும்.
Related Tags :
Next Story