அனாதையாக கிடந்த பச்சிளம்குழந்தை பையில் வைத்து வீசிச்சென்றது யார்? போலீஸ் விசாரணை
தஞ்சை புது ஆற்றங்கரையில் பிறந்து ஒருவாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை அனாதையாக கிடந்தது. அந்த குழந்தையை பையில் வைத்து வீசிச்சென்றது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சை காந்திஜி சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான தரைக்கடைகள் போடப்பட்டுள்ளன. இதனால் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் தீபாவளி பண்டிகைக்கு துணி, மற்றும் இனிப்பு போன்றவை வாங்க வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை கல்லணைக்கால்வாய் எனப்படும் புதுஆற்று கரை ஒரத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
அந்த பகுதி முழுவதும் கடந்த 2 நாட்களாக மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் புது ஆற்றின் கரையில் ஒரு பை கிடந்தது. அந்த பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர்.
பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, தஞ்சை கிழக்குப்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போதும்பெண்ணு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு கிடந்த பையில் பிறந்து ஒரு வாரமே ஆன நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை இருந்தது. அந்த குழந்தையை அங்கு போட்டுச்சென்றது யார்? என தெரியவில்லை. கள்ளக்காதலில் பிறந்ததால் ஆற்றங்கரையில் வீசிச்சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த குழந்தையை போலீசார் தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர். மேலும் இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story