இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க கூடாது கலெக்டர் வேண்டுகோள்
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க கூடாது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி,
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஒவ்வொரு வருடமும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு, அதிக ஒலி ஏற்படுத்தும் வெடியால் ஏற்படும் தீமைகள் மற்றும் விபத்தில்லா தீபாவளியினை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
பட்டாசு விற்பனை செய்யப்படும் கடைகளில் பட்டாசுகளின் வகைகள் ஒவ்வொரு பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள், அவற்றின் அளவுகள் மற்றும் அதனை வெடிக்கும்போது அவை ஏற்படுத்தும் ஒலி, மாசு அளவுகள் பற்றிய தகவல்கள் அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட வேண்டும். அதிகபட்ச ஒலி அளவான 125 டெசிபலுக்கு மேல் ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கண்டிப்பாக பட்டாசுகளை வெடிக்க கூடாது. உச்சநீதிமன்ற விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளை வாங்க கூடாது. தீபாவளி என்பது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத்திருவிழா. அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் பாதுகாப்பாக மற்றும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு தகுந்த தீபாவளியினை கொண்டாட வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story