சாலை ஆய்வாளர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப சாலை ஆய்வாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோதி முருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணி இடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும், தொழில் நுட்ப உதவியாளர்களுக்கான அரசு ஆணை 58-ன் படி சாலை ஆய்வாளர்களுக்கு தர ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story