ஏரிக்கரையில் தனியார் பஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து 35 பயணிகள் காயம்
சோளிங்கர் அருகே ஏரிக்கரையில் தனியார் பஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
சோளிங்கர்,
வேலூர் மாவட்டம் சோளிங்கரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக போளூருக்கு தனியார் பஸ் ஒன்று நேற்று காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சோளிங்கரிலிருந்து சிறிது தொலைவில் கோடைக்கல் பெருங்காஞ்சி ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏரிக்கரையின் வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தலைகுப்புற வீழ்ந்தது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ, அம்மா என அலறி துடித்தனர். விபத்துநடந்தவுடன் டிரைவரும், கண்டக்டரும் கவிழ்ந்த பஸ்சுக்குள் இருந்து வெளிவந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த விபத்தில் சோளிங்கர் அருகே உள்ள கூடலூரை சேர்ந்த சுகாசினி (வயது 20), கட்டேரிகுப்பத்தை சேர்ந்த துளசிராமன் (35), கொடைக்கல் கிராமத்தை சேர்ந்த ஆஷா (21) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் விஜயலட்சுமி (35), திலகம்மாள் (30), நித்யா (21), சரவணன் (25), ராமலிங்கம் (30), கிருஷ்ணன் (35), சரளாதேவி (23) செல்வி (37), பாரதி (20), சூரியா (25), ஜோதி (30), மற்றொரு பாரதி (22), மீனா (25), மூர்த்தி (55) சக்திவேல் (22), ரமேஷ் (21) உள்பட 32 பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
இவர்கள் அனைவரும் சோளிங்கர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயம் அடைந்த சுகாசினி, துளசிராமன், ஆஷா ஆகியோர் மட்டும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story