காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 98 அடியாக உயர்ந்தது.
மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவை கடந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தோ அல்லது குறைந்தோ காணப்படுகிறது. எனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரம் அடைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதாவது, கடந்த 14-ந் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 893 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 97.61 அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதாவது, நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரத்து 750 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து குறைவாக இருந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்தது.
இதற்கிடையே, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 23 ஆயிரத்து 327 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது.
தற்போது தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. அதாவது, நேற்று முன்தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.51 அடியாக இருந்தது. இது நேற்று காலை நிலவரப்படி 98 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

Related Tags :
Next Story