தூத்துக்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் வெங்கடேஷ் ஆய்வு


தூத்துக்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் வெங்கடேஷ் ஆய்வு
x
தினத்தந்தி 18 Oct 2017 3:00 AM IST (Updated: 17 Oct 2017 7:49 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

டெங்கு தடுப்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லயன்ஸ் டவுன், ரோச் காலனி மற்றும் ஆசிரியர் காலனி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நேரில் ஆய்வு செய்தார். அதனைதொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது;–

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. டெங்கு கொசுக்கள் வீடு மற்றும் வீட்டிற்கு அருகிலுள்ள சரியாக மூடாத நீர் சேமிக்கும் தொட்டிகள், குடங்கள், பாத்திரங்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றில் தேங்கும் நல்ல தண்ணீரில் உருவாகும் என்பதால், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், தொழில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

அரசு ஆஸ்பத்திரி

மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் பார்த்துக்கொள்ளவதோடு தேவையான காய்ச்சல் மருந்துகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் தொடர்ந்து வழங்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக சுய வைத்தியம் செய்யாமல், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story