தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மனைவியிடம் தங்க சங்கிலி பறிப்பு
தூத்துக்குடியில், ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மனைவியிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில், ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மனைவியிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரிதூத்துக்குடி மாசிலாமணி நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. இவருடைய மனைவி வசந்தா(வயது 60). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் வசந்தா மாசிலாமணி நகர் முதல் தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று விட்டு பொருட்கள் வாங்கி கொண்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அவர் பின்னால் ஒரு மர்ம நபர் வந்தார். அவர் கண் இமைக்கும் நேரத்தில் வசந்தா கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். பின்னர் அந்த நபர் சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் காத்திருந்த மற்றொரு மர்ம நபருடன் தப்பி சென்று விட்டார்.
வலைவீச்சுஇந்த சம்பவம் குறித்து வசந்தா தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து வருகின்றனர். தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.