கோவை குற்றால அருவியில் ரூ.50 லட்சம் செலவில் மேம்பாட்டு திட்டம் வனத்துறை அதிகாரிகள் தகவல்
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோவை குற்றால அருவியில் ரூ.50 லட்சம் செலவில் மேம்பாட்டு திட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சாடிவயல் வனப்பகுதி உள்ளது. இங்கு அடர்ந்த வனப்பகுதியில் கோவை குற்றால அருவியில் வெள்ளியை உருக்கியதுபோன்று தண்ணீர் கொட்டுகிறது. இங்கு வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டி வருவதால், கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ் கிறார்கள்.
இந்த அருவி அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதாலும், அருவிக்கு செல்லும் வழியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாலும், அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சாடிவயல் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். பின்னர் அங்கிருந்து அவர்கள் வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களில் அருவிக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர். இதற்கு பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறியவர்களுக்கு ரூ.30-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் நாளுக்குநாள் அங்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இன்னும் அதிகமான சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வசதிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் அங்கு என்னென்ன வசதிகள் செய்யலாம் என்பது குறித்து கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில், கோவை கோட்ட வன அதிகாரி சதீஷ் மேற்பார்வையில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். அங்கு செய்யப்பட உள்ள வசதிகள் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை குற்றால அருவிக்கு தினமும் சராசரியாக 300-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதிலும் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் வந்து அருவியில் குளித்து மகிழ்கிறார்கள். மேலும் இங்கு அதிகமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சாடிவயல் சோதனை சாவடி மற்றும் அருவி இருக்கும் பகுதியில் ஏராளமான வசதிகள் செய்யப்பட உள்ளது. இதற்காக அரசிடம் ரூ.50 லட்சம் கேட்டு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
மேலும் அருவியின் அருகே சுற்றுலா பயணிகள் இறக்கி விடப்படும் இடத்தில் மரங்களுக்கு இடையே, பலகைகளால் ஆன தொங்குபாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் பழுதடைந்து காணப்படுகிறது. இது சரிசெய்யப்படுவதுடன், அருவிக்கு நடந்து செல்லும் இடத்தில் ஆங்காங்கே வனப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகள், பறவைகள் குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது.
இதுதவிர சாடிவயல் சோ தனை சாவடியில் குழந்தைகளை கவரும் வகையில் அழகான முறையில் பூங்கா அமைக் கப்படுகிறது. அதில் செயற்கை நீரூற்று, வனவிலங்குகளின் சிலைகள் வைக்கப்படுவதுடன், குழந்தைகள் விளையாட ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களும் வைக்கப் பட உள்ளது.
மேலும் என்னென்ன வசதிகள் செய்யலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஒதுக்கப்பட்டதும், பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story