கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 317 மனுக்கள் பெறப்பட்டன


கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 317 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 18 Oct 2017 4:00 AM IST (Updated: 18 Oct 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 317 மனுக்கள் பெறப்பட்டன.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 317 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. பின்னர் அந்த மனுக்களை தீர ஆராய்ந்து, கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்கு உட்பட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மனு மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கான பதிலையும் தெரிவிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

நலத்திட்ட உதவி

மேலும் இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2016-17-ம் ஆண்டில் பிளஸ்-2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் 2-வது மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு ஊக்கப்பரிசு தொகையாக கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்த மாணவி துர்காவுக்கு ரூ.5 அயிரம், சிதம்பரம் வைகை நகரை சேர்ந்த மாணவன் கீதனுக்கு ரூ.3 ஆயிரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் முஸ்லீம் மகளிர் உதவி சங்கம் மூலம் 7 பேருக்கு ரூ.4 ஆயிரத்து 800 வீதம் ரூ.33 ஆயிரத்து 600-க்கான காசோலை ஆகியவற்றை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, தனித்துணை ஆட்சியர்(சமூகபாதுகாப்பு திட்டம்) கூஷ்ணாதேவி, தனித்துணை ஆட்சியர்(முத்திரைத்தாள்) சேதுராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Next Story