ரெயில் நிலையத்தில் அடகு கடை உரிமையாளரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு


ரெயில் நிலையத்தில் அடகு கடை உரிமையாளரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2017 3:45 AM IST (Updated: 18 Oct 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் அடகு கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடியை தூவி 7 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் ஜங்ஷன்ரோட்டை சேர்ந்தவர் கேசவன் (வயது 55). இவர் அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். தினமும் கேசவன் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி, நேற்று காலை கேசவன் வழக்கம்போல ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 3 மர்மநபர்கள் கேசவனின் முகத்தில் திடீரென மிளகாய் பொடியை தூவினர். இதில் கண்ணில் மிளகாய் பொடிபட்டு, எரிச்சல் தாங்க முடியாமல் அவர் அலறினார்.

போலீசார் விசாரணை

இந்த சமயத்தில், கேசவன் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்தனர். இதையடுத்து கேசவன் திருடன்.. திருடன்... என சத்தம்போட்டார். இதை கேட்ட அங்கிருந்தவர்கள், மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

இது குறித்து கேசவன் விருத்தாசலம் இருப்புப்பாதை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

நடைபயிற்சி மேற்கொண்டவர் மீது மிளகாய் பொடியை தூவி நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story